இந்தியாவின் 76-வது குடியரசு தினத்தை கொண்டாடும் அனைவருக்கும் அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, இதயம் கனிந்த குடியரசு தின நல்வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இந்நன்னாளில் நாட்டு மக்கள் அனைவருக்கும் சகோதரத்துவம் தழைக்கட்டும், அன்பும் அமைதியும் நிறைந்து வழியட்டும் என வாழ்த்தி, வேற்றுமையில் ஒற்றுமையும், பன்முக கலாச்சாரமும் நமது தேசத்தின் இருவிழிகளாக பாதுகாப்பதே நமது இன்றியமையாத நோக்கம் என்பதை இந்த குடியரசு தின நாளில் உறுதி ஏற்போம் என புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.
அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வெளியிட்டுள்ள குடியரசு தின வாழ்த்து செய்தியில், இந்தியாவின் 76-வது குடியரசு தினத்தை கொண்டாடும் இந்நாளில் இந்திய தேசத்தில் உள்ள அனைவருக்கும் தனது இதயம் கனிந்த குடியரசு தின நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.
ஒவ்வொரு குடிமகளுக்கும், குடிமகனுக்கும் அடிப்படை உரிமைகளை உறுதி செய்திடும் வகையில், இந்தியர்களால் இந்தியர்களுக்காகவே எழுதப்பட்ட இந்திய அரசியலமைப்பு சட்டத்தை, கடந்த 1950ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26ஆம் நாள், சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கரின் தலைமையில் இயற்றி, இச்சட்டம் அமலுக்கு வந்த நாளினை போற்றிடும் வகையில், நாம் குடியரசு தினத்தை கொண்டாடி வருகிறோம் - நம் இந்திய தேசம் 1947-ம் ஆண்டு சுதந்திரம் பெற்று இருந்தாலும், தனி உரிமைகள், கடமைகள் அனைத்தும் உருவாக்கப்பட்டு இனி நாங்கள் யாருக்கும் அடிமை இல்லை என்று அறிவித்த இந்த பெருமைக்குரிய நாளினை நாம் அனைவரும் குடியரசு தின விழாவாக கொண்டாடுகின்றோம் என புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.
குடியரசு தினம் என்பது ஜனநாயகம் மற்றும் சமத்துவத்தின் சாரத்தை பிரதிபலிக்கிறது - ஒரு குடியரசில், உச்ச அதிகாரம் மக்களிடமும் அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளிடமும் இருப்பதை உறுதி செய்கிறது - இந்தியாவின் கலாச்சார மற்றும் மொழியியல் பன்முகத்தன்மையைக் கொண்டாடுகிறது - தேசிய ஒற்றுமையை வளர்க்கிறது - எனவே, இந்த பெருமைக்குரிய குடியரசு தினத்தில், நமது சுதந்திரப் போராட்ட வீரர்களின் எண்ணற்ற தியாகங்களுக்கு வீரவணக்கம் செலுத்தியும், நாட்டுக்காக உயிர் தியாகம் செய்தவர்களுக்கு நன்றி தெரிவித்தும், இந்த பூமியில் சிறந்த, வலிமையான மற்றும் சக்திவாய்ந்த தேசமாக நம் இந்திய தேசம் விளங்கிட, நாம் ஒவ்வொருவரும் நமது பங்களிப்பினை அளித்திடுவோம் என புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.
நம் தேசத்தின் மீது நாம் கொண்டுள்ள அன்பை வெளிப்படுத்தும் நாளாக கொண்டாடி வரும் குடியரசு தின நன்னாளில், நம் நாட்டு மக்கள் அனைவருக்கும் சகோதரத்துவம் தழைக்கட்டும், அன்பும் அமைதியும் நிறைந்து வழியட்டும் என வாழ்த்தி, வேற்றுமையில் ஒற்றுமையும், பன்முக கலாச்சாரமும் நமது தேசத்தின் இருவிழிகளாக பாதுகாப்பதே நமது இன்றியமையாத நோக்கம் என்பதை இந்த குடியரசு தின நாளில் உறுதி ஏற்போம் என கழகப் பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.