மின்சாரம் தாக்கி மாணவன் பலி - தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்

எழுத்தின் அளவு: அ+ அ-

சிவகங்கையில் மின்சாரம் தாக்கி பள்ளி மாணவர் உயிரிழந்த வழக்கில் பள்ளி தலைமை ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.

கொய்யாவயல் அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் பள்ளி ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என பெற்றோர் உறவினர்கள் போராட்டம் நடத்தி வந்த நிலையில் பள்ளி தலைமை ஆசிரியர் கணேசன், வகுப்பு ஆசிரியர் பாண்டிமுருகன் ஆகிய இரண்டு பேரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலு முத்து உத்தரவிட்டுள்ளார். தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்ட 5 லட்சம் ரூபாய் நிவாரணத்தை வாங்க மறுத்த குடும்பத்தினர், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.  

varient
Night
Day