2050-ஆம் ஆண்டுக்குள் பூமியில் பெரும்பகுதி காணாமல் போய்விடும் - சூழலியல் நிபுணர் மோகன் முனசிங்கே

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

2050ஆம் ஆண்டுக்குள் பூமியில் பெரும்பகுதி காணாமல் போய்விடும் என்றும் உயிரினங்கள் பல அழிந்துவிடும் என்றும் நோபல் பரிசு பெற்ற பருவநிலை மற்றும் காலநிலை சூழலியல் நிபுணர் மோகன் முனசிங்கே அதிர்ச்சி தரும் தகவலை தெரிவித்துள்ளார். 

காஞ்சிபுரம் மாவட்டம் தண்டலம் பகுதியில் உள்ள ராஜலட்சுமி பொறியியல் கல்லூரியில் 22 வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மோகன் முனசிங்கே, ஆயிரத்து 725 பட்டதாரி மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி கவுரவித்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், புவி வெப்பமயமாவதை தடுக்க, உலக நாடுகளின் தலைவர்கள் மாற்று எரிபொருளை ஊக்குவிக்க முன்வரவேண்டும் என வேண்டுகோள் விடுத்தார் 

Night
Day