எல்.ஐ.சி. புதிய பென்ஷன் திட்டம் : ஜீவன் தாரா 2 அறிமுகம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

எல்.ஐ.சி.யின் புதிய பென்ஷன் திட்டமான ஜீவன் தாரா 2 என்னும் திட்டத்தை அந்நிறுவனத்தின் தலைவர் சித்தார்த்த பமாஹந்தி தொடங்கி வைத்தார். 

இந்தியாவின் மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா பல்வேறு புதிய திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. இந்நிலையில், ஜீவன் தாரா 2 என்ற பாலிசி பொது மக்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் 20 வயது முதல் உள்ளவர்கள் சேர்ந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில், ஆண்டுத்தொகை ஆரம்பத்திலிருந்தே உத்தரவாதம் அளிக்கப்படுவதாகவும், வயதானவர்களுக்கு அதிக வருடாந்திர விகிதங்களுக்கான வசதியும் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. 

Night
Day