ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மினிவேன் கவிழ்ந்து 4 பேர் உயிரிழப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மினி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூன்று பள்ளி மாணவர்கள் உட்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

விருதுநகர் மாவட்டம் மம்சாபுரம் கிராமத்தில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் வரை தனியார் மினி பேருந்து இயக்கப்பட்டு வந்த நிலையில், இன்று வழக்கம்போல் 20க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்றுக் கொண்டிருந்தது. அப்போது வேகமாக சென்றுக் கொண்டிருந்த மினி பேருந்து, காந்தி நகர் அரசு ஆராம்ப சுகாதார நிலையம் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 3 பள்ளி சிறுவர்கள் உட்பட 4 பேர் உயிரிழந்தனர். தகவலறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர் மற்றும் காவல்துறையினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்திற்கு முக்கிய காரணமான மினி பேருந்து ஓட்டுநரை கைது செய்த மம்சாபுரம் காவல்துறையினர்  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

varient
Night
Day