ஷங்ரி கொய்லோ..! மு.க.ஸ்டாலின் பிறந்தநாள்... சீன மொழியில் தமிழக பாஜக வாழ்த்து...

எழுத்தின் அளவு: அ+ அ-

குலசேகரப்பட்டினம் புதிய ராக்கெட் ஏவுதளத்திற்கான விளம்பரத்தில் இந்திய ராக்கெட் இடம்பெறாமல், சீன ராக்கெட்டின் புகைப்படம் இடம்பெற்றிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்த நிலையில் பிறந்தநாள் கொண்டாடும் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினை கலாய்க்கும் வகையில் தமிழ்நாடு பாஜக சார்பில் சீன மொழியில் பிறந்தநாள் வாழ்த்து கூறியிருப்பது நகைப்பை ஏற்படுத்தியுள்ளது.

சொந்த காசிலேயே சூனியம் வைத்து கொள்வது போல் சிக்கி கொண்டது விளம்பர திமுக அரசு...

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் புதிய ராக்கெட் ஏவுதளத்திற்காக பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இது முடிந்த கையோடு ரோகிணி 6 H 200 என்ற சிறிய வகை ராக்கெட்டை விண்ணிற்கு வெற்றிகரமாக செலுத்தியது இஸ்ரோ.

இந்த நிகழ்ச்சிக்காக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அளித்த விளம்பரத்தில் இந்திய கொடிக்கு பதிலாக சீன கொடியின் புகைப்படம் இடம்பெற்றிருந்தது தான் ராக்கெட்டை விட வேகமாக சீறிய செய்தி.

இந்த விவகாரத்தை அல்வா போல் எடுத்து கொண்ட பாஜக, கடுமையான விமர்சனங்களை முன்வைத்தது. இதுகுறித்து பேசிய பிரதமர் மோடி, திமுகவின் விளம்பரம் நகைப்புக்குரியதாக உள்ளது என்றும் அவர்கள் இந்திய அறிவியலையும், இந்திய விண்வெளித் துறையையும் அவமதித்துள்ளனர், அதற்காக அவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று குறிப்பிட்டார்.

மேலும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் ஆகியோரும் கடுமையாக விமர்சித்திருந்தனர். இது தொடர்பாக அனிதா ராதாகிருஷ்ணன் அளித்த விளக்கம் புஸ்ஸான நிலையில், இந்த விவகாரத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றது தமிழக பாஜக...

முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாளுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்த நிலையில், தமிழக பாஜகவின் வாழ்த்துதான், ஸ்டாலினுக்கு முத்தாய்ப்பாக அமைந்திருக்கும்...

தமிழக பாஜகவின் ட்விட்டர் பக்கத்தில், ஸ்டாலினுக்கு சீன மொழியில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து உடன்பிறப்புகளை சீண்டியுள்ளது பாஜக. அந்த பதிவில், முதலமைச்சர் ஸ்டாலினின் பிடித்த மொழியில் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து கொள்வதாகவும், அவர் நீண்ட நாட்கள் ஆரோக்கியத்துடன் வாழ வாழ்த்துவதாக குறிப்பிட்டுள்ளது. 

பாஜகவின் சீன மொழி பிறந்தநாள் வாழ்த்துக்கு நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இது திமுகவுக்கு கிடைத்த மிகப்பெரிய பங்கம் என்றும் பாஜகவிற்கு குசும்புத்தனம் அதிகமாகி விட்டது எனவும் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். 

பிறந்தநாளுக்கு பல்வேறு வகையில் வாழ்த்துகள், பரிசுகள் ஸ்டாலினுக்கு கிடைத்திருந்தாலும், தமிழக பாஜகவின் வாழ்த்து அவருக்கு சிறப்பான சைகையாகவும், தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி இருக்கும் என்பதில் ஐயமில்லை.

Night
Day