வேட்பாளருக்கு ஆரத்தி எடுத்தா ரூ.100... விதிகளை மீறும் திமுக..!

எழுத்தின் அளவு: அ+ அ-

கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளருக்கு ஆரத்தி எடுக்க வந்த பெண்களுக்கு, தேர்தல் விதிமுறைகளை மீறி திமுகவினர் தலா 100 ரூபாய் விநியோகம் செய்யும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடரும் திமுகவினரின் விதிமீறல்களையும் தடுக்காமல் வேடிக்கை பார்க்கும் பறக்கும் படையினர் அலட்சியத்தையும் விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...

வேட்பாளரை வரவேற்கவும், ஆரத்தி எடுக்கவும், பெண்களுக்கு தலா 100 ரூபாயை திமுகவினர் விநியோகித்த காட்சிகள்தான் இவை...

தமிழகத்தில் மக்களவை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள திமுக வேட்பாளர்களுக்கு பொதுமக்களிடையே போதிய வரவேற்பு இல்லாததால் பணம் கொடுத்து கூட்டம் சேர்ப்பதையும், வரவேற்பு அளிப்பதையும் திமுகவினர் வழக்கமாக கொண்டுள்ளனர். 

அந்த வகையில், கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மலையரசன், திருக்கோவிலூரில் தேர்தல் பரபரப்புரையில் ஈடுபட்ட போது, கூட்டத்தை சேர்க்கவும், வேட்பாளருக்கு வரவேற்பு அளிக்கவும் அழைத்து வரப்பட்ட பெண்களுக்கு திமுகவினர் பணப்பட்டுவாடா செய்தது அம்பலமாகியுள்ளது. 

கள்ளக்குறிச்சி தொகுதிக்கு உட்பட்ட ரிஷிவந்தியம் பகுதியில் திமுக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இதனையொட்டி திருக்கோவிலூர் அருகே உள்ள செங்கனாங்கொள்ளை கிராமத்தில் வேட்பாளருக்கு வரவேற்பு அளிப்பதற்காகவும், ஆரத்தி எடுக்கவும் பெண்களுக்கு திமுகவினர் தலா 100 ரூபாய் வழங்கும் வீடியோ வெளியாகியுள்ளது. 

திமுகவினர் பெண்களுக்கு பணம் வழங்கும் காட்சிகள் வெளியான நிலையில், அந்த தொகுதியில் பணியமர்த்தப்பட்டுள்ள தேர்தல் பறக்கும் படையினர், பணப்பட்டுவாடாவில் ஈடுபட்ட திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்த்து வருவதாகவும், இதனால், நியாயமான முறையில் தேர்தல் நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் சமூக ஆர்வலர்கள் தங்களது ஆதாங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

Night
Day