விவிபேட் இயந்திரத்தில் சரிபார்க்க கோரிய வழக்கு : விசாரணைக்கு ஏற்க உயர்நீதிமன்றம் மறுப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நாடாளுமன்ற தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை, விவிபேட் இயந்திரத்தில் சரிபார்ப்பதை கட்டாயமாக்கக் கோரிய வழக்கை விசாரணைக்கு ஏற்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது. தமிழகத்தில் நாளை நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளை, விவிபேட் இயந்திரத்தில் பதிவாகும் சீட்டுகளுடன் ஒப்பிட்டு சரிபார்ப்பதை கட்டாயமாக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி கமிலஸ் செல்வா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி சத்தியநாராயண பிரசாத் அமர்வு, இதே விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால் வழக்கை விசாரணைக்கு ஏற்க முடியாது என கூறி வழக்கை முடித்து வைத்தது.

Night
Day