விழுப்புரம்: காவல் நிலைய வளாகத்தில் மீட்கப்பட்ட அரிய வகை ஆந்தை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் காவல் நிலைய வளாகத்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அரிய வகை ஆந்தை வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. மரக்காணம் பேருந்து நிலையம் அருகே காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த காவல் நிலைய வளாகத்தில் வாகனங்களை நிறுத்தி வைத்திருக்கும் இடத்தில் அரியவகை ஆந்தையை பத்திற்கும் மேற்பட்ட காகங்கள் தாக்கின. இதனையடுத்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த ஆந்தையை போலீசார் மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்தனர். பின்னர், அந்த அரிய வகை ஆந்தைக்கு சிகிச்சை அளித்து காட்டிற்குள் விடுவதற்காக வனத்துறையினர் எடுத்துச் சென்றனர்.

varient
Night
Day