ராஜன் பல் மருத்துவமனை இல்லத் திருமண விழா - புரட்சித்தாய் சின்னம்மா பங்கேற்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

ராஜன் பல் மருத்துவமனையின் தலைவர், மருத்துவர் குணசீலன் இல்லத் திருமண வரவேற்பு விழாவில் அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா கலந்துகொண்டு, மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

ராஜன் பல் மருத்துவமனையின் தலைவரும் மருத்துவருமான குணசீலன் இல்லத்திருமண வரவேற்பு விழா, சென்னை நீலாங்கரையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள, அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வருகை தந்தபோது, திருமண வீட்டார் பூங்கொத்துகள் வழங்கி வரவேற்றனர்.

இதனைதொடர்ந்து, திருமண வரவேற்பு விழாவில் புரட்சித்தாய் சின்னம்மா கலந்துகொண்டு, மணமக்கள் ஷ்ரவன் மற்றும் நேத்ரா ஆகியோருக்கு பூங்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்தார். மணமக்கள் இருவரும் புரட்சித்தாய் சின்னம்மாவிடம் ஆசி பெற்றனர்.

திருமண வீட்டார் மற்றும் உறவினர்கள், புரட்சித்தாய் சின்னம்மாவுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டு வாழ்த்துபெற்றனர்.

Night
Day