மோன்தா புயலால் கடும் கடல் சீற்றம்...

எழுத்தின் அளவு: அ+ அ-

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள மோன்தா புயல், தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது. புயல் கரையைக் கடக்கும் போது 100 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் கடந்த 26ம் தேதி நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மோன்தா புயலாக வலுப்பெற்று தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவியது. தற்போது மோன்தா புயல் வடக்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து மசூலிப்பட்டினத்திற்கு 190 கிலோ மீட்டர் தெற்கு தென்கிழக்கிலும், காக்கிநாடாவிற்கு 270 கிலோ மீட்டர் தெற்கு தென்கிழக்கிலும், விசாகப்பட்டினத்திற்கு 340 கிலோ மீட்டர் தெற்கிலும், ஒடிசாவின் கோபால்பூருக்கு 550 கிலோ மீட்டர் தெற்கு தென்மேற்கிலும் மையம் கொண்டுள்ளது. மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மையம் கொண்டுள்ள மோன்தா புயல் வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தீவிர புயலாக வலுவடைந்துள்ளது.

தீவிர புயலாக வலுவடைந்துள்ள மோன்தா புயல் ஆந்திராவின் மசூலிப்பட்டினம் கலிங்கப்பட்டினம் இடையே காக்கிநாடா அருகே இன்று இரவுக்குள் கரையை கடக்க கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புயல் கரையைக் கடக்கும் போது 90 முதல் 100 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 110 கிலோமீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீச கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மோன்தா புயல் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 15 கிலோ மீட்டர் வேகத்தில் வட-வடமேற்கே நகர்ந்து கடும் சுழற் காற்றாக வலுப்பெற்றுள்ளது.

Night
Day