தீவிரமடைந்தது "மோன்தா புயல்"

எழுத்தின் அளவு: அ+ அ-

மோன்தா தீவிர புயல் ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்க உள்ளதால் காக்கிநாடா துறைமுகத்தில் 8ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. 

வங்கக்கடலில் உருவாகிய மோன்தா புயல் இன்று மாலை அல்லது இரவுக்குள் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 110 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக,  காக்கிநாடா துறைமுகத்தில் 8ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. அதே போல், விசாகப்பட்டினம், கங்காவரம் துறைமுகங்களில் 6ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டும், மசூலிப்பட்டினம், நிசாம்பட்டினம், கிருஷ்ணாபட்டினம் ஆகிய 3 துறைமுகங்களில் 5ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டும் ஏற்றப்பட்டுள்ளது.

Night
Day