மதுரை: சொத்துக்களை பெற்றுக்கொண்டு ஏமாற்றிய மகனை முறையாக விசாரிக்கவில்லை என புகார்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மதுரையில் பெற்றோரை கைவிட்ட மகனிடம் விசாரணை நடத்தியது குறித்து பதில் மனு தாக்கல் செய்ய வருவாய் துறை செயலர் மற்றும் ஆட்சியருக்கு உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. திருமங்கலத்தை சேர்ந்த ரவணப்பசாமி என்பவர் தாக்கல் செய்த மனுவில், பூர்வீக சொத்துகளை பெற்றுக் கொண்டு தங்களை கைவிட்ட மகனை கோட்டாட்சியர் முறையாக விசாரிக்காமல் மகனுக்கு சாதமாக தீர்ப்பு வழங்கியதாக குற்றம் சாட்டினார். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற கிளை நீதிபதி, ரவணப்பசாமியின் மகனிடம் நடத்தப்பட்ட விசாரணை குறித்து மாவட்ட ஆட்சியர், வருவாய்த்துறை செயலாளர் மற்றும் உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியர் ஆகியோர் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.

Night
Day