பொதுமக்களுக்காக ஆர். கே பேட்டையில் நீர் மோர் பந்தலை திறந்த கழக நிர்வாகிகள்

எழுத்தின் அளவு: அ+ அ-

அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவின் அறிவுறுத்தலின்படி திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே. பேட்டையில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே. பேட்டை ஒன்றிய அஇஅதிமுக சார்பில் ஆர்.கே. பேட்டை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு, கோடையில் பொது மக்களின் தாகத்தை தணிக்கும் வகையில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது . முன்னாள் அரசு கொறடாவும் முன்னாள் திருத்தணி சட்டமன்ற உறுப்பினருமான பி.எம் நரசிம்மன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சோளிங்கர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என்.ஜி. பார்த்திபன் கலந்து கொண்டு நீர் மோர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு இளநீர், தர்பூசணி, ஜூஸ், மோர், மற்றும் அன்னதானம் வழங்கினார். இந்த நிகழ்வில் எல்லாபுரம் எல். ரஜினி, முன்னாள் அரசு வழக்கறிஞர் இ.எம்.எஸ். நடராஜன், முன்னாள் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் மற்றும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள், கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

varient
Night
Day