பழங்குடியின பெண் நீதிபதிக்கு சின்னம்மா வாழ்த்து

எழுத்தின் அளவு: அ+ அ-

ஜவ்வாது மலை கிராமத்தைச் சேர்ந்த பெண், பழங்குடியினர் பிரிவில் முதல் பெண் நீதிபதியாக தேர்வாகி சாதனை படைத்திருப்பதற்கு, அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். 

அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வெளியிட்டுள்ள எக்‍ஸ் வலைதளப் பதிவில், திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலையை அடுத்த புலியூர் கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியின பெண் ஸ்ரீபதி, நீதிபதியாக தேர்வாகியிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளார். திருமதி ஸ்ரீபதி தனது 23 வயதிலேயே பழங்குடியினர் பிரிவில் முதல் பெண் சிவில் நீதிபதியாக தேர்வாகி சாதனை படைத்துள்ளதற்கு தனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்வதாக புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார். 

பெண்ணினத்திற்கே பெருமை சேர்த்துள்ள ஸ்ரீபதி, பல சவால்களை எதிர்கொண்டு, தனது விடா முயற்சியாலும், தன்னம்பிக்கையாலும் இத்தகைய ஒரு சாதனை படைத்துள்ளதை எண்ணி மிகவும் பெருமிதம் அடைவதாகவும், நம் வருங்கால சந்ததியினருக்கு முன்னுதாரணமாக விளங்கும் ஸ்ரீபதி, அவரது வாழ்வில் எல்லா வளங்களையும், நலன்களையும் பெற்று, அனைத்திலும் வெற்றி பெற வேண்டும் என எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுவதாகவும் கழகப் பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார். 

varient
Night
Day