நீதிபதியாகும் பழங்குடியின பெண் - விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி

எழுத்தின் அளவு: அ+ அ-

திருவண்ணாமலை மாவட்டம் புலியூரை சேர்ந்த பழங்குடியினப்பெண், நீதிபதி தேர்வில் வெற்றி பெற்று அசத்தியுள்ளார். இளம் வயதில் நீதிபதி ஆக உள்ள சாதனை பெண் குறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு.

திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூர் அடுத்த புலியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீபதி. ஜவ்வாதுமலையில் பிறந்த இவர், தனது பள்ளி படிப்பை திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரியில் தனது பள்ளி படிப்பை முடித்தார். பின்ன்ர் பி.ஏ.பி.எல் சட்டப்படிப்பை முடித்த அவர், திருவண்ணாமலை மாவட்டம் புலியூரை சேர்ந்த 108 ஆம்புலன்ஸ் வாகனம் ஓட்டும் வெங்கட்ராமன் என்பவரை மணந்து கொண்டார். 

23 வயது மட்டுமே ஆன ஸ்ரீபதி கடந்த 2023 ஆம் ஆண்டு தமிழ்நாடு பணியாளர்கள் தேர்வாணையம் நடத்திய உரிமையில் நீதிபதி தேர்வு எழுதி அதில் வெற்றி பெற்று அசத்தி உள்ளார். தற்போது 6 மாத கால நீதிபதி பயிற்சிக்கு செல்ல உள்ள ஸ்ரீபதிக்கு அனைத்து தரப்பினரிடமிருந்து பாராட்டுக்குளும் வாழ்த்துக்களும் குவிந்து வருகின்றன. 

திருமணமானாலும் தனது கடும் முயற்சியால் நீதிபதி தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளதாகவும், குழந்தை பிறந்த இரண்டு நாட்களில் தேர்வு எழுத சென்றது அவரது விடாமுயற்சியை காட்டுவதாகவும் கிராம மக்கள் நெகிழ்ச்சி தெரிவித்தனர்.

அடிப்படை வசதிகள் இல்லாக கிராமத்தில் பிறந்து நீதிபதி தேர்வில் ஸ்ரீபதி வெற்றி பெற்றது பாராட்டுக்குரியது என்றும், மலைவாழ் மக்களுக்களான தங்களுக்கு ஸ்ரீமதி தேர்வில் வெற்றி பெற்றது மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாகவும் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

மலை கிராமமான ஜவ்வாது மலையில் பிறந்து, தற்போது நீதிபதி தேர்வில் வெற்றி பெற்ற ஸ்ரீபதிக்கு அவரது கணவர் வெங்கட்ராமன் பக்கத் துணையாக இருந்துள்ளார். 108 ஆம்புலன்ஸ் ஓட்டுனரான வெங்கட்ராமன், தனது மனைவி ஸ்ரீபதியின் கனவுக்கு தடைகல்லாக இல்லாமல் நீதிபதி ஆக வேண்டும் என்ற லட்சியத்திற்கு உறுதுணையாக இருந்துள்ளார்.

அதேபோல் ஸ்ரீபதியின் தாயும், தனது கணவரின் ஊரில் இருந்தால் மகளை சரியாக படிக்க வைக்க முடியாது என கருதி, தனது சொந்த ஊருக்கு மகளை அழைத்துச்சென்று படிக்க வைத்துள்ளார். 

தனது ஊரியில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் பங்கேற்ற ஸ்ரீபதி கிராம வளர்ச்சித் தொடர்பாக அந்த கூட்டத்தில் பல கேள்விகளை எழுப்பி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்..

நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ஸ்ரீபதி தேர்விற்கு தன்னை சிறப்பாக தயார்படுத்தி இருந்த நிலையில் தேர்வு நடைபெறும் நாளன்று அவரது பிரசவ தேதியும் கொடுக்கப்பட்டிருந்தது. மேலும், தேர்வு நடைபெறுவதற்கு இரண்டு நாட்கள் முன்பு குழந்தையும் பிறந்துவிட்டது.

ஆனால் தேர்வைக் கண்டிப்பாக எழுதவேண்டும் என்று தீவிரமாக இருந்தார் அவர். அதனால் 1 லட்சம் ரூபாய் வரை செலவு செய்து, கார் ஒன்றை பாதுகாப்பான சொகுசு காராக மாற்றி அதில் சென்னைக்கு பயணித்து உரிமையியல் நீதிபதி தேர்வு எழுதிய சம்பவம், அவரது மன தைரியத்திற்கும் விடாமுயற்சிக்கும் சான்றாக உள்ளது. அதன் பயனாக தற்போது தேர்வில் வெற்றி பெற்று அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார். 

வைராக்கியத்துடன் படிக்க வைத்த தாயாலும், கணவரின் ஒத்துழைப்பாலும் அடிப்படை வசதிகள் கூட முறையாக இல்லாத கிராமத்தில் பிறந்த பழங்குடியின பெண் தற்போது நீதிபதியாக ஆக உள்ளார் என்பது அனைவரையும் நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.  

Night
Day