பத்திரிகையாளர்களை துன்புறுத்தக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்

எழுத்தின் அளவு: அ+ அ-

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் விசாரணை என்ற பெயரில் பத்திரிகையாளர்களை துன்புறுத்த கூடாது என காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் முதல் தகவல் அறிக்கை வெளியான விவகாரம் தொடர்பாக பத்திரிகையாளர்களிடம் கடுமையான விசாரணையை காவல்துறை மேற்கொண்டது. இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், விசாரணை என்ற பெயரில் பத்திரிகையாளர்களை துன்புறுத்த கூடாது எனவும், விசாரணைக்கு பத்திரிகையாளர்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியது. பத்திரிகையாளர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களை ஒப்படைக்க காவல்துறைக்கு உத்தரவிட்ட நீதிமன்றம், விசாரணையின்போது குடும்ப விவரங்களை ஏன் கேட்க வேண்டும் கேள்வி எழுப்பியது. மேலும் முதல் தகவல் அறிக்கை கசிந்த வழக்கில் கோட்டூர்புரம் காவல் ஆய்வாளரை விசாரித்தீர்களா என சரமாரி கேள்வி எழுப்பிய நீதிமன்றம், விரிவான உத்தரவை பிறப்பிப்பதாக தெரிவித்தது.

Night
Day