பட்டுக்கோட்டை அருகே நடைபெற்ற காதணி விழா : புரட்சித்தாய் சின்னம்மா ஆசீர்வதித்து, பரிசுகள் வழங்கி வாழ்த்து

எழுத்தின் அளவு: அ+ அ-

அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, தஞ்சாவூர் மாவட்டம், வெங்கரையைச் சேர்ந்த  V.N. S. ஆனந்தன் - திருமதி. ஷீலா ராணி ஆ​கி​யோரின் குழந்தைச் செல்வங்களின் காதணி விழாவில் பங்கேற்று, குழந்தைகளுக்கு வாழ்த்துத் தெரிவித்தார்.

தஞ்சாவூர்  மாவட்டம் பட்டுக்கோட்டை அருகில் உள்ள வெங்கரையைச் சேர்ந்த V.N. S. ஆனந்தன் - திருமதி. ஷீலா ராணி ஆ​கி​யோரின் குழந்தைச்செல்வங்கள் சிவஸ்ரீ, ஆதிநாத் ஆகியோரின் காதணி விழா, சீதாம்பாள்புரம், மாதா மஹாலில் நடைபெற்றது. இவ்விழாவில், பங்கேற்க வருகை தந்த, அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. குழந்தைகளின் பெற்றோர்களும், உறவினர்களும் ஆரத்தி எடுத்து சின்னம்மாவை வரவேற்றனர். விழா மேடைக்குச் சென்ற புரட்சித்தாய் சின்னம்மா, காதணிகளை, தனது திருக்கரங்களால் எடுத்துக் கொடுக்க, குழந்தைகள் இருவருக்கும் காது குத்தும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து, குழந்தைகள் இருவரையும் புரட்சித்தாய் சின்னம்மா ஆசீர்வதித்து, பரிசுகள் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். குழந்தைகளின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அனைவரும் புரட்சித்தாய் சின்னம்மாவுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர். 

Night
Day