நாய்கள் தொல்லை - விளம்பர அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் என்ன

எழுத்தின் அளவு: அ+ அ-

தெரு நாய்கள் தொந்தரவு காரணமாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை செயல்படுத்த விளம்பர திமுக அரசுக்கு விலங்குநல ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

நாடு முழுவதும் உள்ள தேசிய, மாநில நெடுஞ்சாலைகள், ரயில் மற்றும் பேருந்து நிலையங்கள் சுற்றித்திரியும் கால்நடைகள் மற்றும் தெருநாய்களை பிடித்து  முகாம்களில் அடைக்கவும், கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட பொது இடங்களில் தெருநாய்கள் நுழையாத வண்ணம் கண்காணித்து நடவடிக்கை எடுக்கவும், உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. ஆனால், அதற்கான நடவடிக்கைகளை விளம்பர திமுக அரசு எடுத்ததாக தெரியவில்லை என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். 

பொது இடங்களில் பிரதான சாலைகளில் சுற்றித்திரியும் நாய்களை பெயரவுக்கு அழைத்து சென்று, மிக அருகிலேயே விட்டு செல்வதால் அதே இடத்திற்கு மீண்டும் வந்து விடுவதாக குற்றம்சாட்டுகின்றனர். ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்ட நாய்களை அழைத்து சென்று ஊசி போட்டு மீண்டும் நோய் பாதிக்கப்படாத நாய்களுடன் விட்டுவிடுவதால் தொற்று மேலும் அதிகரிப்பதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். ஆண்டுக்கு 10 கோடி ரூபாய் அளவுக்கு கால்நடைகளுக்காக செலவு செய்யப்படுவதாக சென்னை மாநகராட்சி மார்தட்டி கொள்ளும் நிலையில் அதற்கான எந்த முனைப்போ, பயனோ இல்லை என கூறுகின்றனர். 

நாய்கடிபட்டு அரசு மருத்துவமனைகளக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் கூறும் சமூகஆர்வலர்கள் நிரந்தர தீர்வு எப்போது  என்றும் கேள்வி எழுப்புகின்றனர். 

மதுரையில் தெருவுக்கு தெரு கணக்கில் இல்லாத வகையில் தெருநாய்கள் சுற்றி வருவதாகவும், வலைப்போட்டு அழைத்து செல்கிறோம் என்ற பெயரில் மாநகராட்சி ஏமாற்றுவதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இரவில் நடமாட முடியவில்லை என்றும், நாய்கடிக்கு மருத்துவமனை சென்றால் மருந்துகள் இல்லை என கூறுவதாகவும் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். 

திருநெல்வேலி மாநகராட்சியில் உள்ள  தெரு நாய்களுக்கு முகாமிருந்தும் அது செயல்படாமல் இருப்பது வருத்தம் அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளார். நெல்லை மாநகராட்சி பகுதிகளில் நாய்கள் தொந்தரவு நாளுக்கு நாள் அதிகரித்துள்ளநிலையில் நாள்தோறும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நாய்கடிக்கு தடுப்பூசி செலுத்தி வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. எனவே உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், தெரு நாய்களை பிடித்து தடுப்பூசி போடுவதற்கு நெடுஞ்சாலைத்துறை உள்ளாட்சித் துறை பொதுப்பணித்துறை இணைந்து செயல்பட வேண்டும் எனவும் மேலப்பாளையத்தில் உள்ள நாய்கள் காப்பகத்தை மீண்டும் திறந்து தெருநாய்களை விட்டு பாதுகாக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர். 


Night
Day