இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து- 2 பேர் படுகாயம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருப்பூர் அருகே பல்லடத்தில் தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்தனர். கோவை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்ற கார் வலதுபுறமாக திரும்பிய போது, இருசக்கர வாகனத்தின் மீது மோதி தூக்கி வீசப்பட்டது. இதில் பாலகிரி, அஜித் என்ற இளைஞர்கள் படுகாயமடைந்தனர். 2 பேரும் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விபத்தை ஏற்படுத்திய காரை நிறுத்தாமல் தப்பி சென்ற ஓட்டுநரை சிசிடிவி காட்சி அடிப்படையில் தேடி வருகின்றனர். விபத்தை ஏற்படுத்தும் பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. 

Night
Day