தேனி: இருசக்கர வாகனம் மீது வேன் மோதி விபத்து - பெண் உயிரிழப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தேனி அருகே இருசக்கர வாகனம் மீது வேன் மோதியதில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த அதிர்ச்சியூட்டும் கண்காணிப்பு கேமரா காட்சி வெளியாகியுள்ளது. ஆண்டிப்பட்டி பகுதியை சேர்ந்த பாண்டியராஜன் தனது உறவினர்கள் 3 பேருடன் இருசக்கர வாகனத்தில் தேனி சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியாக வந்த வேன் , பாண்டியராஜனின் இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில், மார்க்கணி என்ற பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், படுகாயம் அடைந்த 3 பேர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

Night
Day