ஏஆர்டி நிதி நிறுவன வணிக வளாகங்களின் பொருட்களை ஏலம் விட மதிப்பீடு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் செயல்பட்டு வந்த ஏஆர்டி நிதி நிறுவன வணிக வளாகங்களின் பொருட்களை ஏலம் விடுவதற்காக மதிப்பீடு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. ஏ.ஆர்.டி நிறுவனம் பொதுமக்களிடம் அதிக வட்டி தருவதாகக்கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்தது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. இந்நிலையில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் மற்றும் வருவாய் துறையினர் ஏஆர்டி நிதி நிறுவனம் மற்றும் மால் உள்ளிட்ட கிளைகளில் மீண்டும் சோதனையில் ஈடுபட்டு பொருட்களை மதிப்பீடு செய்து வருகின்றனர். மதிப்பீட்டின் அடிப்படையில் ஏலம் விடப்பட்டு பணத்தை இழந்த பொதுமக்களுக்கு அவர்களது தொகைக்கு ஏற்ப திரும்ப அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

varient
Night
Day