எழுத்தின் அளவு: அ+ அ- அ
திருச்சி அருகே, கள்ளச்சந்தையில் படுஜோராக நடைபெறும் மது விற்பனையை காவல்துறையினர் கண்டுகொள்ளவில்லை என அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டி உள்ளனர்.
அய்யம்பாளையம் அடுத்த கருங்காடு பகுதியில் அரசு மதுபான கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடைக்கு எதிரே கள்ளசந்தையில், பாட்டில் ஒன்றுக்கு 90 ரூபாயில் இருந்து 120 ரூபாய் வரை அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில், கள்ளச்சந்தையில் மது விற்பனையில் ஈடுபட்டவரிடம் மதுப்பிரியர் பேரம் பேசும் வீடியோ வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
அரசு மதுபான கடைகள் மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படும் என அறிவித்திருந்தாலும் பல இடங்களில் காவலர்களுக்கு லஞ்சம் கொடுத்து சட்டவிரோதமாக கள்ள சந்தையில் அதிக விலைக்கு மது விற்பனை நடந்து கொண்டே தான் இருப்பதாக அப்பகுதிமக்கள் குற்றச்சாட்டிகின்றனர். தொடர்ந்து கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்று வருவதை தடுக்க திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.