வீழ்ச்சி அடைந்த பொருளாதார நாடு இந்தியா- டிரம்ப் சர்ச்சை கருத்து

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஆகஸ்ட் 1ம் தேதி முதல் இந்தியாவுக்கு 25 சதவீதம் வரி விதிக்கப்படுமென அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் உருவாவதில் இருக்கும் சிக்கல்கள் என்ன? பார்க்கலாம் விரிவாக..!

இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்படாத நிலையில், வரும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் இந்தியா மீது 25 சதவீத வரியை விதிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்து பதற்றத்தை பத்த வைத்ததுள்ளார். 

இந்தியா - அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் சூழலில் ட்ரம்ப் வரி விதிப்பை அறிவித்திருப்பது, இருநாடுகளுக்கு இடையிலான நல்லுறவு குறித்த கேள்வியை எழுப்பியுள்ளது.. இந்த நிலையில் ட்ரம்பின் இந்த கெடுபிடிக்கு பின்னால் அமெரிக்க பால் இறக்குமதிக்கு கண்டிப்பாக அனுமதி இல்லை என்ற நிலைப்பாட்டில் மத்திய அரசு உறுதியாக நிற்பதே காரணம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் பாலுக்கு அனுமதி வழங்க இந்தியா தயக்கம் காட்டுவது ஏன்? என்ற கேள்விக்கு அது சாதாரண பால் அல்ல அசைவ பால் என்பதே காரணமாகவும் சொல்லப்படுகிறது.. 

இந்தியாவில் பசு, எருமை, ஆடு, ஏன் ஒட்டக்கத்தின் பால் கூட பயன்படுத்தப்படும் போது நட்பு நாட்டின் உறவுக்கே பங்கம் ஏற்படும் அளவுக்கு அமெரிக்க பால் இறக்குமதிக்கு அனுமதியே வழங்க மாட்டோம் என இந்தியா பிடிவாதம் பிடிப்பதன் பின்னணி தான் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. அமெரிக்காவால் இறக்குமதி செய்ய கட்டாயப்படுத்தப்படும் அந்த பால் சாதரண மில்க் இல்லையாம்  'நான்-வெஜ் மில்க்-காம்'

புல், வைக்கோல், தவிடு, புண்ணாக்கு போன்ற தீவனங்கள் மூலம் விலங்குகளிடம் இருந்து இயற்கையான முறையில் பாலை பெறும் நடைமுறையே இந்தியாவை பொறுத்தவரை பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால் அமெரிக்காவில் பசுக்களின் எடையை அதிகரிக்கவும் பாலின் உற்பத்தியை அதிகப்படுத்தவும், விலங்குகளின் இறைச்சி உணவாக வழங்கப்படுகிறதாம்.. அதாவது விலங்குகளின் இறைச்சி, ரத்தம் போன்றவை கலந்த தீவனமே உணவாக வழங்கப்படுவதாகவும் அவ்வாறு பெறப்படுவதே 'பிளட் மீல்' என அழைக்கப்படும் 'நான்-வெஜ் மில்க்' என்றும் சொல்லப்படுகிறது. 

அமெரிக்கக் கால்நடை தீவனத்தில் பன்றிகள், குதிரைகள் மற்றும் கோழிகளின் எச்சங்கள், இறைச்சிகள், பசுக்களுக்கு உணவாக சேர்க்கப்படுகிறது என்பதை சியாட்டில் டைம்ஸ் விசாரணை அறிக்கையும் ஆவணப்படுத்தியுள்ளது. உலக வர்த்தக அமைப்பில் 'நான்-வெஜ் பாலுக்கு' அறிவியல் ரீதியில் தடையல்ல என்று அமெரிக்கா வாதிட்டாலும், இந்தியாவைப் பொறுத்தவரை, இது அறிவியலைப் பற்றியது அல்ல, மாறாக நம்பிக்கையைப் பற்றியது என்ற வாதமே முன்வைக்கப்படுகிறது.

இப்போது நடைபெற்றுவரும் வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகளில், அமெரிக்கா தங்கள் நாட்டு வேளாண் பொருட்கள், பால் பொருட்கள் மற்றும் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களுக்கு இந்தியச் சந்தையில் அனுமதி தரவேண்டும் என அழுத்தம் கொடுப்பதாகவும் அதை இந்தியா திட்டவட்டமாக மறுத்து வருவதாகவும் இதுவே வர்த்தம் ஒப்பந்தம் கையெழுத்தாவதில் சிக்கலை உண்டாக்குவதாகவும் சொல்லப்படுகிறது. 

இந்திய சந்தையை அமெரிக்காவின் வேளாண் மற்றும் பால் பொருட்களுக்காக திறந்துவிடவேண்டும் என்று அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்தி வரும் போதிலும், இந்திய விவசாயம் மற்றும் பால் துறையை பாதுகாக்கும் பொருட்டு இந்த கோரிக்கைக்கு இணங்க இந்தியா மறுத்து வருகிறது.

இந்தியாவை பொறுத்தவரை பால் மற்றும் பால் பொருட்கள் என்பது ஊட்டச்சத்து மிகுந்த உணவு என்பதை தாண்டி அது மத நம்பிக்கையோடும்... புனிததன்மையோடும் பார்க்கப்படுகிறது. சமீபத்தில் புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவில் லட்டில் நெய்க்குப் பதிலாக விலங்குக் கொழுப்பு கலக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டு நாட்டையே உலுக்கும் அளவுக்கு பூதாகரமாக வெடித்தது. 

இந்தியாவைப் பொறுத்தவரை பால் என்பது பொருளாதாரம் மட்டும் அல்ல... அதற்கும் மேல் தேசத்தின் பண்பாடு, வாழ்வியல், நம்பிக்கை மற்றும் புனிதமான பாரம்பரியமாக பார்க்கப்படுகிறது... அப்படியிருக்கையில் நட்பு நாட்டின் பாரம்பரியத்தை உணராமல் அமெரிக்கா அதிகப்படியான வரி விதிப்பு என்ற ஒற்றை புள்ளியில் இந்தியாவுக்கு நெருக்கடியை உண்டாக்குவது நியாயமா என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது....!

Night
Day