பேரறிஞர் அண்ணாவின் 55-ஆம் ஆண்டு நினைவு நாள் : புரட்சித்தாய் சின்னம்மா மலரஞ்சலி

எழுத்தின் அளவு: அ+ அ-

பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் 55ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில், அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, மலர்வளையம் வைத்தும் மலர்தூவியும் மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, உறுதிமொழி ஏற்றுக்‍ கொண்டார்.

தமிழ் மக்‍களின் வாழ்வில் எந்நாளும் நீக்‍கமற நிறைந்திருப்பவரும், பேச்சாற்றல், எழுத்தாற்றலால் தமிழகத்தில் மறுமலர்ச்சியை ஏற்படுத்திய தலைவருமான பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் நினைவு நாளை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அண்ணாவின் நினைவிடத்திற்கு, அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, சென்னை தியாகராய நகர் இல்லத்திலிருந்து புறப்பட்டுச் சென்றார். அப்போது கழகத் தொண்டர்கள் வாழ்த்து முழக்‍கமிட்டனர்.  

மெரினா கடற்கரையில் உள்ள பேரறிஞர் அண்ணா நினைவிடத்திற்கு சின்னம்மா சென்றபோது, எதிரே வந்த முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம், காரை விட்டு இறங்கி, மரியாதை நிமித்தமாக, புரட்சித்தாய் சின்னம்மாவை சந்தித்துப் பேசினார். புரட்சித்தாய் சின்னம்மா, ஓ. பன்னீர்​செல்வத்திடம் நலம் விசாரித்தார்.  ஓ. பன்னீர் செல்வத்துடன் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் உள்ளிட்ட நிர்வாகிகளும் உடனிருந்தனர்.

பேரறிஞர் அண்ணா நினைவிட வளாகத்தில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால், அதன் அருகில் வைக்கப்பட்டிருந்த அண்ணாவின் திருவுருவப்படத்திற்கு அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா மலர்வளையம் வைத்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து புரட்சித்தாய் சின்னம்மா, அறிஞர் அண்ணா நினைவுநாள் உறுதிமொழி ஏற்றுக்‍கொண்டார். புரட்சித்தாய் சின்னம்மா மற்றும் கழகத் தொண்டர்கள் அனைவரும் அண்ணா நினைவுநாளை முன்னிட்டு மவுன அஞ்சலி செலுத்தினார்கள். 

இந்த நிகழ்ச்சியில் தமிழக அரசு முன்னாள் தலைமைக் கொறடா பி.எம். நரசிம்மன், முன்னாள் அமைச்சர் எம்.ஆனந்தன், வேலூர் மாவட்ட கழக முன்னாள் செயலாளர் L.K.M.B. வாசு, திருநெல்வேலி மாநகர் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர் வி.ஆர்.வெண்மதி, மதுரவாயல் நகர்மன்ற முன்னாள் தலைவர் ஆலப்பாக்கம் ஜீவானந்தம், பூவிருந்தவல்லி முன்னாள் நகரக்‍ கழக செயலாளர் பூவை து.கந்தன், திருவள்ளூர் வடக்கு மாவட்ட MGR இளைஞரணி தலைவர் எல்லாபுரம் எல்.ரஜினி, விழுப்புரம் மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் திண்டிவனம் முகமதுஷெரிப், திருவெண்ணெய்நல்லூர் ஒன்றிய கழக செயலாளர் பெரியசெவலை ஜெ.குமார், பரங்கிமலை ஒன்றிய முன்னாள் கழகச் செயலாளர் மேடவாக்கம் S.காளிதாஸ், தென்சென்னை மாவட்டக்‍ கழக துணைச் செயலாளர் வேளச்சேரி S.சின்னதுரை, திண்டிவனம் முன்னாள் நகர கழக செயலாளர் திண்டிவனம் சேகர், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் சோழவரம் G.ராஜேந்திரன், நாமக்கல் மாவட்ட பொறுப்பாளர் என். கோபால், விருகை பகுதி மகளிர் அணி செயலாளர் ஸ்ரீதேவி பாண்டியன், செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரி எஸ்.எஸ். சூர்யா, மறைமலைநகர் சங்கீதா மற்றும் திரளான கழக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்‍கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு, பேரறிஞர் அண்ணா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்கள். 

Night
Day