தென்காசி: தேசிய நெடுஞ்சாலையில் அணிவகுத்து நிற்கும் கனிமவள லாரிகள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே கனிமவள லாரிகள் தேசிய நெடுஞ்சாலையில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக வாகன ஓட்டிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். தமிழக எல்லை பகுதியான புளியரை வழியாக ஆயிரக்கணக்கான கனரக வாகனங்கள் கேரளாவுக்கு செல்கின்றன. இந்நிலையில் திருமங்கலம் - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையான புதூர் பகுதியில் ஏராளமான கனிமவள லாரிகள் அணிவகுத்து நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படும் நிலை உருவாகும் என தெரிவித்த வாகன ஓட்டிகள், விபத்து ஏற்படாத வண்ணம் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். 

varient
Night
Day