முதலமைச்சர், துணை முதலமைச்சர் இருவரும் இதுவரை எஸ்.சி, எஸ்.டி விடுதிகளை பார்வையிட்டது உண்டா - மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

போலி திராவிட மாடல் ஆட்சியில் எஸ்.சி, எஸ்.டி மாணவர்களுக்கு அடிப்படை வசதிகள் ஏதுவும் செய்து தராமல் விடுதிகளுக்கு சமூக நீதி என்று பெயர் மாற்றம் மட்டும் செய்தால் போதுமா? என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை கே.கே நகரில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரதமரின் மக்கள் நல்வாழ்வு திட்டத்தின் கீழ் சேவைகள் துவக்க நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கலந்து கொண்டார். பின்னர்  சந்தித்த அவர், எஸ்.சி, எஸ்.டி மாணவர்களின் விடுதியை சமூக நீதி விடுதியாக தமிழக முதலமைச்சர் பெயர்மாற்றம் செய்து அறிவித்திருப்பதாகவும், முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் இருவரும் இதுவரை எஸ்.சி, எஸ்.டி விடுதிகளை பார்வையிட்டது உண்டா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், அடிப்படை வசதிகள் ஏதுவும் செய்து தராமல் விடுதிகளுக்கு சமூக நீதி என்று பெயர் மாற்றம் மட்டுமே செய்து முதலமைச்சர் போலி திராவிட மாடல் ஆட்சி நடத்தி வருவதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் குற்றம்சாட்டினர்.

Night
Day