ரியல் எஸ்டேட் மோசடி வழக்கு : நடிகர் மகேஷ் பாபுவுக்கு நுகர்வோர் குறைதீர்வு ஆணையம் நோட்டீஸ்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ரியல் எஸ்டேட் மோசடி வழக்கு தொடர்பாக நடிகர் மகேஷ் பாபுவுக்கு ரங்கா ரெட்டி மாவட்ட நுகர்வோர் குறைதீர்வு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

நடிகர் மகேஷ் பாபு ஹைதராபாத்தில் இருந்து செயல்படும் சாய் சூர்யா டெவலப்பர்ஸ் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் விளம்பர படங்களில் நடித்திருந்தார். இந்நிறுவனம் அவரது படத்தை காட்டி அங்கீகரிக்கப்படாத மனைகளை விற்று மோசடியில் ஈடுபட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹைதராபாத்தை சேர்ந்த இருவர் நடிகர் மகேஷ் பாபு நடித்த விளம்பர படத்தை பார்த்து, பாலாப்பூரில் தலா 38 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்து வீட்டு மனைகளை வாங்கியதாகவும் ஆனால் அந்த வீட்டுமனைக்கு மாநகராட்சி அங்கீகாரம் இல்லாததால் பாதிக்கப்பட்டதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர். எனவே பணத்தை திருப்பி கேட்டபோது 15 லட்சம் ரூபாய் மட்டும் கொடுத்தாகவும், மகேஷ் பாபுவிடம் விசாரணை நடத்தி மீதி பணத்தை பெற்று தருமாறும் பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை வைத்தனர். இந்த புகாருக்கு விளக்கம் கேட்டு நடிகர் மகேஷ் பாபுவுக்கு ரங்கா ரெட்டி மாவட்ட நுகர்வோர் குறைதீர்வு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

Night
Day