ஆசிரியர் பணியில் சேர TET தேர்வு கட்டாயம் - உச்சநீதிமன்றம் உத்தரவு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஆசிரியர் பணியில் தொடர அல்லது பதவி உயர்வு பெற தகுதித் தேர்வில் வெற்றி பெறுவது கட்டாயம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

டெட் எனப்படும் ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு வழக்கை விசாரித்த நீதிபதிகள் தீபன்கர் தத்தா, அகஸ்டின் ஜார்ஜ் மாசி அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது.

அதில், ஆசிரியர் பணியில் தொடர அல்லது பதவி உயர்வு பெற தகுதித் தேர்வில் வெற்றி பெறுவது கட்டாயம் என நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். ஓய்வு பெற ஐந்து ஆண்டுகள் மட்டுமே இருந்தால் ஆசிரியர்கள் பணியில் தொடரலாம் என்றும் ஓய்வு பெற 5 ஆண்டுகளுக்கு அதிகமாக உள்ள ஆசிரியர்கள் பணியில் தொடர டெட் தேர்வில் தகுதி பெற வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது. இல்லையென்றால் வேலையை விட்டு வெளியேறலாம் என்றும் இறுதி சலுகையுடன் கட்டாய ஓய்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. 

அதேசமயம் அரசு உதவி பெறும் சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் டெட் தேர்வை அரசு கட்டாயப்படுத்த முடியுமா, அது அவர்களின் உரிமைகளை பாதிக்குமா என்பது குறித்து விசாரிக்க வழக்கை உயர் அமர்வுக்கு மாற்ற தலைமை நீதிபதிக்கு பரிந்துரைப்பதாகவும் நீதிபதிகள் தீப்பில் தெரிவித்தனர்.

Night
Day