வாக்கு திருட்டு மூலம் பீகாரில் வெற்றி பெற பிரதமர் மோடி முயற்சி - மல்லிகார்ஜுன கார்கே

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

வாக்கு திருட்டு மூலம் பீகாரில் வெற்றி பெற பிரதமர் மோடி முயற்சிப்பதாக காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம்சாட்டி உள்ளார்.

பீகார் மாநிலம் பாட்னாவில் ராகுல் காந்தி மேற்கொண்டுள்ள வாக்காளர் அதிகார யாத்திரையின் நிறைவு நாள் பொதுக்கூட்டத்தில் கார்கே கலந்து கொண்டார். அந்த கூட்டத்தில் பேசிய கார்கே,   பிரதமர் மோடி வாக்கு திருட்டு மூலம் பீகாரில் வெற்றி பெற  முயற்சிப்பதாகவும், மக்கள் கவனமாக இருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். கவனமாக இல்லாவிட்டால் தேர்தலில் மக்கள் சக்தியை மூழ்கடித்து அவர்கள் வெற்றி பெற்றுவிடுவார்கள் எனவும் அவர் கூறினார். 

Night
Day