பள்ளி வாகனம் மீது ரயில் மோதி பயங்கர விபத்து - 3 மாணவர்கள் உயிரிழப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே ரயில்வே கேட்டை கடக்க பள்ளி வேன் மீது ரயில் மோதிய கோர விபத்தில் அக்கா, தம்பி உள்ளிட்ட மூன்று மாணவ, மாணவிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

செம்மங்குப்பம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து பள்ளி மாணவர்களை ஏற்றிக் கொண்டு பள்ளி வேன் ஒன்று சென்றுள்ளது. செம்மங்குப்பம் அருகே உள்ள ரயில்வே கேட் மூடாமல் இருந்ததால் ரயில் வராது என்று கருதிய பள்ளி வேன் ஒட்டுனர் ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது எதிர்பாராத விதமாக சிதம்பரம் நோக்கிச் சென்ற பயணிகள் ரயில், பள்ளி வேன் மீது மோதி கோர விபத்தை ஏற்படுத்தியது. இதில் 50 மீட்டர் தூரத்துக்கு இழுத்துச் செல்லப்பட்ட தனியார் பள்ளி வாகனம் சுக்குநூறாக உடைந்து சிதறியது. இதனால் பேருந்தில் இருந்த மாணவ, மாணவிகள் வெளியே தூக்கி வீசப்பட்டனர். இந்த கோர சம்பவத்தால் பள்ளி பேருந்தில் இருந்த சேரப்பாளையம் பகுதித சேர்ந்த 11 ஆம் வகுப்பு மாணவி சாருமதி, தொண்டமாநத்தை சேர்ந்த 6 ஆம் வகுப்பு மாணவன் நிவாஸ் ஆகிய இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்தைப் நேரில் பார்த்த கிராம மக்கள் விரைந்து சென்று படுகாயமடைந்த, மாணவர்கள், வேன் ஓட்டுனர் உள்ளிட்ட 4 பேரை மீட்டனர். அவர்கள் அனைவருக்கும் கடலூர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. 

Night
Day