முதியோர் உதவித்தொகை வழங்குவதில் தாமதம் - மூதாட்டி மயக்கம்

எழுத்தின் அளவு: அ+ அ-

கோவில் விவகாரத்தில் ஏற்பட்ட பிரச்னை தொடர்பாக மதுரை ஆட்சியரகத்திற்கு புகார் அளிக்க வந்த பெண் ஒருவர் திடீரென மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மதுரையை அடுத்துள்ள எழுமலை பேரூராட்சிக்கு உட்பட்ட 6வது வார்டில் ஒரே சமூகத்தை சேர்ந்த 2 பிரிவினர் வசித்து வருகின்றனர். தெற்கு தெரு, வடக்கு தெரு என பிரிந்துள்ள இரு பிரிவு மக்களுக்கும் தங்களுக்கான கோவிலில் வழிபடுவதில் பல வருடங்களாக பிரச்சினை இருந்து வருகிறது. இரு பிரிவினருக்கும் ஏற்பட்ட மோதல் காரணமாக 2 கோவில்களுக்கும் வேலி அமைக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த மாதம் வடக்கு தெரு மக்களுக்கான அம்மன் கோவில் மட்டும் திறக்கப்பட்டுள்ளது.

பின்னர் தெற்கு தெரு மக்களுக்கான கருப்பசாமி கோவிலை திறக்க அதிகாரிகள் அனுமதி அளித்த நிலையில் மராமத்து வேலைகளை அப்பகுதியை சேர்ந்த பெண்கள் செய்து வந்துள்ளனர். இதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட கொத்தனார் ராஜபாண்டியை, வடக்கு தெருவை சேர்ந்தவர்கள் கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து புகார் அளிக்க சென்ற பெண்களை, எழுமலை காவல்நிலைய போலீசார், பொய் வழக்கு போட்டு விடுவோம் என மிரட்டியுள்ளனர். மேலும், திருச்சி சிறைக்கு போறிங்களா, சென்னை சிறைக்கு போறிங்களா என கேலி செய்து சிரித்ததாகவும் தெரிகிறது

இதுகுறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் புகார் மனு அளிக்க வந்த போது, பெண் ஒருவர் திடீரென மயங்கி விழுந்தார். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.

Night
Day