தூய்மை பணியாளர்கள் நாளை முதல் போராட்ட அறிவிப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

விளம்பர திமுக அரசை கண்டித்து தூய்மை பணியாளர்கள் நாளை முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக சென்னை சேப்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தூய்மை பணியாளர்கள் தொழிற்சங்கத்தினர், 70 நாட்களுக்கும் மேலாக பணி இல்லாமல், தூய்மை பணியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், வீடு, உணவு கொடுப்பதாக தூய்மை பணியாளர்களை விளம்பர திமுக அரசு ஏமாற்றிவிட்டதாகவும் குற்றம்சாட்டினர். சமூக நீதி, சமத்துவம் என்பதை வார்த்தையாக மட்டுமே விளம்பர திமுக அரசு பயன்படுத்துவதாகவும், தங்கள் மீது உண்மையான அக்கரை இல்லை எனவும் குற்றம் சாட்டினர். 

விளம்பர திமுக அரசை கண்டித்து நாளை முதல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ள தூய்மை பணியாளர்கள், தாங்கள் கைதுக்கு தயாராக இருப்பதாகவும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். மேலும், தீபாவளியன்று கருப்பு தீபாவளியாக கடைபிடித்து, மாநகராட்சி அதிகாரிகளுக்கு வாழ்த்து கூறும் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் கூறியுள்ளனர். 

Night
Day