திருவண்ணாமலையில் கெமிக்கல் மூலம் 40 டன் பாறை பிளப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருவண்ணாமலையில் மண் சரிவால் உருண்டு விழுந்த 40 டன் ராட்சத பாறை சிறு, சிறு பாறைகளாக உடைத்து அகற்றப்பட்டது.

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலின் பின்புறம் உள்ள மலை மீது கடந்த டிசம்பர் 1-ம் தேதி ஃபெஞ்சல் புயலால் மண் சரிவு ஏற்பட்டு 40 டன் ராட்சத பாறை உருண்டு விழுந்தது. இதில் 7 பேர் உயிரிழந்தனர். தொடர்ந்து 50 நாட்களுக்கு பிறகு கடந்த 3 தினங்களாக திருச்சியை சேர்ந்த வல்லுனர் குழுவினர் பாறையை உடைக்கும் பணியில் ஈடுபட்டனர். அதன்படி பாறையில் 5 அடி ஆழத்திற்கு 220-க்கும் மேற்பட்ட துளைகள் இட்டு, ராக் கிராக் தொழில்நுட்பம் மூலம் லைம் பிளஸ் கால்சியம் ஹைட்ராக்சைடு கெமிக்கலை கரைத்து ஊற்றினர். இதையடுத்து ராட்சத பாறை சிறு, சிறு பாறைகளாக விரிசல் விட்டு உடைந்து விழுந்தது. உடைந்த பாறைகள் ராட்சத பொக்லைன் மூலம் அகற்றப்பட்டன.

Night
Day