திருப்பூர்: திமுக நிர்வாகி மீது காவல் ஆணையரிடம் பெண் புகார்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருப்பூர் மாவட்டத்தில் மதுபான பார் டெண்டர் எடுப்பதற்காக தனது கையெழுத்தை போலியாக போட்டு மோசடி செய்ததாக, பாதிக்கப்பட்ட நில உரிமையாளர் காவல் ஆணையரிடம் புகாரளித்தார். அணைப்புதூர் பகுதியில் புஷ்பா என்பவருக்கு சொந்தமான இடத்தில் மதுபான பார் அமைக்க, அவரது ஒப்புதலே பெறாமல் கையெழுத்தை போலியாக போட்டு, திமுக நிர்வாகி சிவசெல்வம் என்பவர் தடையில்லாச் சான்றிதழ் வழங்கியதாக கூறப்படுகிறது. இதனால் தாம் ஏமாற்றப்பட்டதை அறிந்த புஷ்பா, சிவசெல்வம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருப்பூர் காவல் ஆணையரிடம் மனு அளித்தார். 

varient
Night
Day