சேலம்: கலப்பட முறையில் ஜவ்வரிசி தயாரித்த ஆலைக்கு சீல் வைப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சேலம் மாவட்டம் சித்தேரி பகுதியில் கலப்பட முறையில் ஜவ்வரிசி தயாரித்த ஆலைக்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். நியூ பாரதவேல் சேகோ ஆலையில் உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் தலைமையிலான குழுவினர் திடீர் ஆய்வில் மேற்கொண்டனர். அப்போது அந்த ஆலையில் சோடியம் ஹைப்போ குளோரைடு கெமிக்கல் கேன்கள் கண்டறியப்பட்டது. மேலும் இந்த ரசாயனம் ஜவ்வரிசி தயாரிப்பதில் பயன்படுத்தப்பட்டிருந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, கலப்பட ஜவ்வரிசியை பறிமுதல் செய்த உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள், ஆலைக்கு சீல் வைத்ததுடன் அதன் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்தனர். 

varient
Night
Day