தென்காசி: நகராட்சி கூட்டத்தில் நாய் முகமூடி அணிந்து பங்கேற்ற கவுன்சிலர்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தென்காசியில் வெறிநாய் தொல்லையை கட்டுப்படுத்த வலியுறுத்தி, நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர் ஒருவர் நாய் முகமூடி அணிந்து மனு அளித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. 20-வது வார்டை சேர்ந்த நகர்மன்ற உறுப்பினர் முகமது ரபீக், நகராட்சிக் கூட்டத்துக்கு நாய் முகமூடி அணிந்து வந்தார். அப்போது, தனது வார்டு பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்துள்ளதாகவும், இது குறித்து நகராட்சி நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் குற்றம்சாட்டினார். தொடர்ந்து நாய் போன்று குரைத்த கவுன்சிலர் ரபீக், 
தெருநாய்களால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்குமாறு நகர் மன்ற தலைவரிடம் மனு அளித்தார்.

varient
Night
Day