திருச்சி: ரூ.10.65 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருச்சி விமான நிலையத்தில் இருந்து மலேசியாவிற்கு கடத்த முயன்ற 10 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல் செய்யப்பட்டன. திருச்சி விமான நிலையத்தில் இருந்து மலேசியா செல்ல இருந்த மலின்டோ ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்ய இருக்கும் பயணிகள் உடைமைகளை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.அப்போது ஆண் பயணி ஒருவரது உடைமையில் மறைத்து எடுத்துச் செல்ல முயன்ற அமெரிக்க டாலர், மலேசிய ரிங்கிட் மற்றும் இந்திய ரூபாய் என சுமார் 10 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சிகள் மற்றும் இந்திய பணத்தையும் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Night
Day