புதுக்கோட்டை: கழுத்தறுக்கப்பட்ட நிலையில் கிடந்த இளைஞரின் சடலம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் இளைஞர் ஒருவர் கழுத்தறுக்கப்பட்டும், கத்தியால் குத்தப்பட்டும் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதுபான கடை அருகே உள்ள அரியாண்டிபட்டி கண்மாய்கரையில் கழுத்தறுக்கப்பட்டு, உடல் முழுவதும் கத்தியால் குத்தப்பட்டு இளைஞர் ஒருவர் சடலமாக கிடைப்பதாக போலீசார் தகவல் கிடைத்தது. விசாரணையில் கொலைசெய்யப்பட்டவர் அஞ்சுபுளிபட்டியை சேர்ந்த அடைக்கப்பன் என்பதும் வெளியூரில் வசித்து வந்த அவர் ஓட்டு போடுவதற்காக சொந்த ஊருக்கு வந்ததும் தெரியவந்தது. அடைக்கப்பன் மீது பல்வேறு வழக்குகள் உள்ளதாக கூறப்படும் நிலையில் முன் விரோதமாக கொல்லப்பட்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணம் உள்ளதா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Night
Day