தமிழகம்
ரிப்பன் மாளிகை அருகில் டெண்ட் அடித்து போராட்டம்
மாநகராட்சி தூய்மை பணியினை தனியார்மயப்படுத்தும் முயற்சிக்கு கண்டனம் -சென?...
திருச்சி மாநகராட்சி கூட்டத்தில் மேயர் உரையாற்றி கொண்டிருந்த போது துணை மேயர் நமட்டு சிரிப்பு சிரித்ததால் சலசலப்பு ஏற்பட்டது. திருச்சி மாநகராட்சியின் மாதாந்திர அவசர மற்றும் சாதாரண கூட்டம் இன்று நடைபெற்றது. அப்போது, கூட்டத்தை தொடங்கி வைத்து பேசிய மேயர் அன்பழகன் ஸ்வச் பாரத் திட்டத்தில் மத்திய அரசால் மாநகராட்சிக்கு வழங்கப்பட்ட வாழ்த்து சான்றிதழை காண்பித்த போது, அருகில் இருந்த துணை மேயர் திவ்யா தனக்கோடி நமட்டு சிரிப்பு சிரித்து கொண்டிருந்தார். அமைச்சர் கே.என். நேரு மற்றும் அன்பில் மகேஷ் இடையே உட்கட்சி மோதல் நிலவி வருகிறது. இந்நிலையில், நேருவின் ஆதரவாளரான மேயரும், அன்பில் மகேஷின் ஆதரவாளரான துணை மேயரும் தனித்தனியே பிரிந்து அரசியல் செய்து வரும் சூழலில், மேயரை சீண்டும் விதமாக துணை மேயர் நமட்டு சிரிப்பு சிரித்தது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாநகராட்சி தூய்மை பணியினை தனியார்மயப்படுத்தும் முயற்சிக்கு கண்டனம் -சென?...
மலையாளத்தில் வெளியான உள்ளொழுக்கு திரைப்படம் சிறந்த மலையாள திரைப்படமாக த?...