திருச்சி : தமிழக அரசைக் கண்டித்து மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு ஆதரவாக திருச்சியில் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகளை போலீசார் கைது செய்தனர்.

9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பார்வை மாற்றுத்திறனாளிகள் சென்னையில் தினமும் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். கடந்த 12-ஆம் தேதி முதல் சென்னையின் பல்வேறு இடங்களிலும் அவர்கள் சாலைமறியலில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னையில் போராடும் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு ஆதரவாகவும், கோரிக்கைளை நிறைவேற்ற வலியுறுத்தியும் திருச்சி தெப்பக்குளம் அருகே பார்வை மாற்றுத்திறனாளிக்ள சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பார்வையற்றோர் சங்கங்களின் கூட்டுக் குழு சார்பில் இந்த போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது அவர்கள் விளம்பர திமுக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர். 

Night
Day