நெல்லை : முண்டத்துறை சரணாலயத்தில் புலிகள் கணக்கெடுப்பு துவக்கம் - மாஞ்சோலைக்கு சுற்றுலா பயணிகள் செல்லத் தடை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நெல்லை மாவட்டம் முண்டத்துறை புலிகள் காப்பகத்தில் புலிகளை கணக்‍கெடுக்‍கும் பணி தொடங்கியுள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக பகுதியில்  சிறுத்தை, யானை, புலி, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. இதில் இந்த ஆண்டுக்கான புலிகள் கணக்‍கெடுக்‍கும் பணி இன்று தொடங்கியுள்ளது. புலிகளின் எச்சம், கால் தடங்களைக்‍ கொண்டு இந்த கணக்‍கெடுப்பு பணி நடத்தப்படுகிறது. வரும் 27ம் தேதி வரை இப்பணி நடைபெறுவதால், பாபநாசம் வனத்துறை சோதனை சாவடி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இதனால் மாஞ்சோலை, மணிமுத்தாறு அருவி, பாபநாசம் அகஸ்தியர் அருவி, காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவில் பகுதிகளில் பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

varient
Night
Day