திருச்சி : அரசு வாகனத்தில் பொன்முடி பயணம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஊழல் வழக்கில் சிக்கி அமைச்சர் பதவியை இழந்த திமுகவின் முன்னாள் அமைச்சர் பொன்முடி, திருச்சியில் தேசியக்கொடி கட்டிய அரசு வாகனத்தில் பயணம் செய்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. திருச்சியில் விளம்பர திமுக சார்பில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில், பங்கேற்ற முன்னாள் அமைச்சர் பொன்முடி நிகழ்ச்சி முடிந்த பிறகு, பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷின் தேசியக்கொடி கட்டிய அரசு வாகனத்தில் அமர்ந்து பயணம் செய்துள்ளார். ஊழல் வழக்கில் சிக்கி 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கபட்டதோடு, அமைச்சர் பதவியும் இழந்த பொன்முடி அரசு வாகனத்தில் பயணம் செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

Night
Day