திமுக ஆட்சியில் மாணவிகளுக்கு பாதுகாப்பில்லை - பாமக தலைவர் அன்புமணி கண்டனம்

எழுத்தின் அளவு: அ+ அ-

 கோவையில் கல்லூரி மாணவி 3 மர்ம நபர்களால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது அதிர்ச்சியளிப்பதாக பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். 

தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், திமுக அரசு அதிகாரத்தில் வந்ததில் இருந்தே பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் பாதுகாப்பு இல்லை என்பதை சுட்டிக்காட்டினார். மேலும் சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் சென்ற ஆண்டு மாணவி பாலியல் வன்கொடுமை நிகழ்ந்த சம்பவம், திருவள்ளூர் ஆரம்பாக்கம் 8 வயது மாணவி வன்கொடுமை சம்பவம், தற்போது கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவம் என திமுக அரசில் பாலியல் வன்கொடுமை பட்டியல் நீளுவதாக குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாடு முழுவதும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களின் விற்பனை கட்டுக்கடங்காமல் இருப்பதும் தான் இந்த குற்றங்களுக்கு முக்கிய காரணமாக இருக்கிறது எனவும் பதிவிட்டிருக்கிறார்.

varient
Night
Day