திண்டுக்கல் : மீன்பிடி திருவிழா - போட்டிப் போட்டு மீன்களை பிடித்து சென்ற பொதுமக்கள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே நடைபெற்ற மீன்பிடி திருவிழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டு உற்சாகத்துடன் மீன்களை பிடித்து சென்றனர். ஒத்தினி பட்டி பகுதியில் உள்ள ஆயக்கட்டு கண்மாயில் ஆண்டுதோறும் மீன் திருவிழா நடைபெறுவது வழக்கம். தற்போது, இந்த குளத்தில் நீர் வற்றியதால் ஆயக்கட்டுதாரர்கள் சார்பில் மீன்பிடி திருவிழா நடத்தப்பட்டது. இதில், அப்பகுதியில் உள்ள ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். விரால், ஜிலேபி, கெழுத்தி, பாறை, கட்லா உள்ளிட்ட பல்வேறு வகையான மீன்களை பொதுமக்கள் போட்டிப்போட்டு மகிழ்ச்சியுடன் பிடித்து சென்றனர்.

Night
Day