கோவை : உலக தலைக்காய விழிப்புணர்வு தினம் - இருசக்‍கர வாகன ஆம்புலன்ஸ் சேவை தொடக்‍கம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

உலக தலைக்காய விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு, கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் இருசக்கர வாகன ஆம்புலன்ஸ் சேவை தொடங்கி வைக்‍கப்பட்டு, விழிப்புணர்வு நடைப்பயணம் நிகழ்ச்சி நடைபெற்றது. சாலை விபத்துக்களால் அதிக உயிரிழப்புகள் ஏற்படுவதை தடுக்‍கும் வகையில், தனியார் மருத்துவமனை ஒன்று இரு சக்கர வாகன ஆம்புலன்ஸ் சேவையை கோவையில் முதல்முறையாக அறிமுகம் செய்துள்ளது. மருத்துவமனையின் தலைவர் டாக்டர் மாதேஸ்வரன்  இந்த சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்து பேசுகையில், போக்குவரத்து விதிகளை சரியாக கடைபிடித்தாலே பெரும்பான்மையான விபத்துகளை தவிர்க்கலாம் என்றும், விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல் பத்து நிமிடங்களுக்குள் அளிக்கப்படும் முதலுதவி சிகிச்சையில் சிறப்பு பயிற்சிபெற்றவர்களே இந்த இரு சக்கர ஆம்புலன்ஸை இயக்குவதாகவும் தெரிவித்தார்.

Night
Day