குளத்துப்பட்டியில் சிறுமாய் கண்மாயில் ஊத்தா குத்து மீன் பிடித் திருவிழா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே குளத்துப்பட்டியில் உள்ள சிறுமாய் கண்மாயில் ஊத்தா குத்து மீன்பிடித் திருவிழா விமரிசையாக நடைபெற்றது. ஊத்தா குத்து மீன்பிடி என்பது 100 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை கட்டணம் செலுத்தி டோக்கன் பெற்றுக் கொண்டு மீன்களை பிடிக்க வேண்டும் என்பது கட்டுப்பாடு. அதன் ஒரு பகுதியாக குளத்துப்பட்டியில் உள்ள சிறுமாய் கண்மாயில் ஊத்தாக்குத்து மீன்பிடித் திருவிழா நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஊத்தா பயன்படுத்தி கெளுத்தி, கெண்டை, ஜிலேபி, விரால் உள்ளிட்ட பல்வேறு வகையான மீன்களை பிடித்து மகிழ்ந்தனர். 

Night
Day