தமிழகம் முழுவதும் இன்று குரூப்-4 தேர்வு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் நடத்தும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகளுக்கான குரூப் 4 தேர்வு இன்று  நடைபெறவுள்ளது.

பல்வேறு துறைகளில் காலியாகவுள்ள மூவாயிரத்து 935 தொகுதி 4 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த ஏப்ரல் மாதம் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி இத்தேர்வுக்கு விண்ணப்பித்த தேர்வர்களுக்கு கொள்குறி வகை முறையில் இன்று தேர்வு நடைபெறவுள்ளது.  தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் நான்காயிரத்து 922 தேர்வு மையங்களில் 13  லட்சத்து 89 ஆயிரத்து 738 விண்ணப்பதாரர்கள் எழுத உள்ளனர். தேர்வினை கண்காணிக்கும் பொருட்டு ஒவ்வொரு மாவட்டத்திலும் துணை ஆட்சியர் நிலையில் ஒவ்வொரு பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட தேர்வு மையங்களுக்கு நுழைவுச் சீட்டில் குறிப்பிட்டுள்ளவாறு காலை 9 மணிக்குள் சென்றுவிட வேண்டும் என்றும் அதற்குப் பிறகு செல்லும் தேர்வர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும் தேர்வாணையம் தெரிவித்துள்ளது. 

Night
Day