நாகை மீனவர்கள் கடலில் இறங்கி போராட்டம்

எழுத்தின் அளவு: அ+ அ-

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே தூண்டில் வளைவு மீன்பிடி துறைமுகம் அமைக்கும் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டதை கண்டித்து மீனவர்கள் கடலில் இறங்கி போராட்டம் நடத்தினர். 

வெள்ளப்பள்ளத்தில் 2019ம் ஆண்டு 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தூண்டில் வளைவு மீன்பிடி துறைமுகம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. 6 ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் துறைமுகப் பணிகள் முடிக்கப்படாமல் பாதியிலேயே நிறுத்தப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பேரிடர் காலங்களில் மீன்பிடிக்க செல்ல முடியாமல் அவதியுறுவதாக அப்பகுதி மீனவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். துறைமுக கட்டுமானத்திற்கான நிதியை ஒதுக்காமல் பணியை பாதியில் நிறுத்திய திமுக அரசைக் கண்டித்து 500க்கும் மேற்பட்ட மீனவர்கள் கருப்பு கொடி ஏந்தி கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.  அப்போது அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர். 

Night
Day