வேதாரண்யம் நோக்கி சென்ற அரசு பேருந்தில் முகப்பு விளக்கு எரியாத அவலம் - குழந்தைகள், பயணிகள் அவதி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நாகையிலிருந்து வேதாரண்யம் நோக்கி சென்ற அரசு பேருந்தில் முகப்பு விளக்கு எரியாததால் நடுவழியில் நிறுத்தப்பட்டது. இதனால் பேருந்தில் குழந்தைகளுடன் பயணித்த பயணிகள் கடும் அவதி அடைந்தனர். தண்ணீர்பந்தல் பேருந்து நிலையம் அருகில் நாகையிலிருந்து வேதாரண்யம் நோக்கி 40 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த அரசு பேருந்தில் ஓட்டுநர் முகப்பு விளக்கை போட்டுள்ளார். ஆனால் முகப்பு விளக்கு எரியாததால் ஓட்டுநர் சாலை ஓரத்தில் பேருந்தை நடுவழியில் நிறுத்தியதால் பயணிகள், குழந்தைகள் அவதி அடைந்தனர். நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு முகப்பு விளக்கை சீர்செய்த ஓட்டுநர், பின்னர் பேருந்தை அங்கிருந்து எடுத்துச் சென்றார். 

Night
Day